/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 13, 2012

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் தமிழ் இணையம்- பயிலரங்கம்ஒரத்தநாட்டில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் மகளிர் கல்லூரியில் 11-01-2012 புதன் அன்று தமிழ்த்துறையின் சார்பாகத் தமிழ இணையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.விழாவின் தொடக்கமாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சரளா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரி முதல்வர் திருமதி மணிமேகலை அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்.கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை மற்றும் தமிழ்த்துறைத் தலைவி முனைவர் சரளா அவர்கள்.

அடுத்து நான் தமிழில் இணையத்தின் தோற்றம், அது கடந்து வந்த பாதை, வளர்ச்சி நிலை மற்றும் தமிழ் இணையாதளங்கள், அவற்றில் நாம் எவ்வாறு எழுதமுடியும் என்பதையும், அதற்கு எந்தெந்த தமிழ் எழுத்துருவை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்து விளக்கினேன்.

பிறகு தமிழ் வலைப்பூ என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பதையும் விளக்கினேன்.
இறுதியாக முதுகலை மாணவிகளுக்குத் தேவையான தமிழ் நூல்கள் தமிழ் இணையக்கல்விக் கழகம் இணையப்பக்கத்தை காட்டி அதில் உள்ள தமிழ் நூல்களை எடுத்துக்காட்டினேன்.பயிர்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்,பேராசிரியைகள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணியையும் அவர்கள் சேகரித்துள்ள ஓலைச்சுவடிகளையும் எடுத்துக் காட்டினேன்.மின்குழுமத்தின் இன்றையத் தேவைகளையும் குறிப்பிட்டுக் காட்டினேன்.
தமிழ்விக்கிப்பீடியாவின் இன்றையத் தேவையினையும் அதில் நாம் எவ்வாறு எழுதுமுடியும் என்ற வழிமுறையையும் விளக்கினேன்.இறுதியாகத் தமிழ் துறைப் பேராசிரியை முனைவர் சுமதி அவர்கள் நன்றி கூறினார்.


தமிழ் இணையம் சிறப்பு சொற்பொழிவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்துகொண்டனர். நண்பரும், பேராசிரியருமான திரு. துரைமுருகன்,மற்றும் கண்ணன் எம்மை வழி அனுப்பி வைத்தனர்.

1 comments:

  • Rishvan says:
    January 20, 2012 at 10:13 PM

    நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்