/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 31, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (30-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம் நிறைவுவிழா

காலை அமர்வில் AU-KBC,ஆய்வுமையத்தின் பேராசிரியை ஷோபா அவர்கள் தற்சுட்டு பதிலிடுபெயர் தீர்வு (ANAPHORA RESOLUTION) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய மொழிகளின் ஆராய்ச்சியில் திராவிடமொழிகளுக்கான பதிலிடுபெயர்கள் எவ்வாறு உருவாக்கம் பெறுகிறது என்று விளக்கினார்.


பேராசிரியை ஷோபா அவர்களுக்கு ந.தெய்வசுந்தரம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குதல்

அடுத்த அமர்வில் பேராசிரியர் நாகராஜன் அவர்கள் RADIO VOICC என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன்று கல்வி பரிமாற்றம் பெற்றுவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு மிகமுக்கியக் காரணம். தற்பொழுது மாணவர்களின் ஆசிரியர் கணினியாகி விட்டது. இனி மின் கல்விதான் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.

பேராசிரியர் நாகராஜன்

மேலும் மோடலர் என்ற மென்பொருளைக்கொண்டு பாடம் நடத்த தேவையான அனைத்து திறனையும் கொண்டுள்ளது. மோடலின் மூலம் பல பல்கலைக்கழகங்களின் பாடங்களை காணமுடிகிறது. என்று கூறினார்.


மாலை நான்கு மணியளவில் நிறைவு விழா இனிதே தொடங்கியது.


நிறைவு விழாவில் தமிமிழ்த்துறைப் தலைவர் வ.தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மயிலை எழுத்துருவை உருவாக்கிய கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை புரிந்திருந்தார்.
கு.கல்யாணசுந்தரம்


அவர் தமிழ்மொழியையும் கணினி அறிவையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ் இணைய மாநாடு போன்று இப்பயிலரங்கம் நடந்துள்ளது. இங்கு நடந்த பயிலரங்க நிகழ்வுகளை மின் வடிவில் இணையத்தில் ஏற்றம் செய்தால் உலகத்தமிழர் அனைவருக்கும் இது பயன்படும் வகையில் அமையும் என்றார்.


அடுத்துப் பயிலரங்கத் தொகுப்புரையாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் பதினொரு நாட்கள் நடந்த நிகழ்வின் தொகுப்பாக இதுபோன்ற கணினித்தமிழ் பயிலரங்கம் எங்கும் நடைபெறவில்லை என குறிப்பிட்டார். அனைவரும் சேர்ந்து தமிழ்மென்பொருள்களை உருவாக்கவேண்டும் என்றார். அதற்குத்தான் இந்த பயிலரங்கம் என்று குறிப்பிட்டுச்சென்றார்.


இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின்(cill-ldcil) ஆய்வு மாணவார் திரு.பிரேம் அவர்கள் நாங்கள் இங்குதான் முதன்முதலில் கணினிமொழியும் டமிழ்மொழியும் இணைந்து நடந்த பயிலரங்கமாகப் பார்க்கின்றோம்.கணினியின் சிறப்பும் தமிழ்மொழியின் சிறப்பையும் நன்கு இப்பயிலரங்கம் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
திரு.பிரேம்

அடுத்துப் பயிலரங்கில் கலந்துகொண்ட A.V.C கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் பயிலரங்கில் நடந்த நிகழ்வுகள் குறித்துப் பேசினார். தமிழைக் கணிதமொழி என்பதை நாங்கள் இங்குதான் உணர்ந்தோம். இலக்கணத்தை முழுமையாகக் கற்றாவர்கள்தான் கணினித்துறையில் புதிய மென்பொருளை உருவாக்கமுடியும், நாங்கள் இங்கு பதிவேற்றம் செய்த கருத்துக்களை நல்லமுறையில் பதிவிரக்கம் செய்தாக வேண்டும். இப்பயிலரங்கில் கலந்துகொண்டவர்களில் தமிழ்விக்கிப்பீடியா குறித்தச் செய்திகளைத் தெளிவுபடுத்திய தகவலுழகன் மற்றும் தமிழ் வலைப்பூக்களைப் பலருக்கு உருவாக்கித் தந்த முனைவர் துரை.மணிகண்டன் அவர்களின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது என்றார்.
பேராசிரியர் தி.நெடுஞ்சுழியன்.

பேராசிரையைத் தொடர்ந்து குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை இந்த பயிலரங்கம் தமிழகப் பாடத்திட்டத்தை மாற்றும் நோக்கில் அமைந்துள்ளது. இனியாவது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இணையத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் ஒரு பாடத்தை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் இப்பயிலரங்கை சிறப்பாக நடத்திய இந்த நிருவனத்திற்கு மிக்க நன்றியுடையவர்களாக இருப்போம் என்றார்.

இலங்கையிலிருந்து வந்திருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம் நாங்கள் இலங்கையில் தமிழில்தான் பேசுகின்றோம் ஆனால் இங்கு தமிழில் பேசுவதைப் பலர் தவிர்க்கின்றனர். தமிழ்ச்சார்ந்த மென்பொருள்கள் இன்னும் உருவாக்க இந்த பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.


சு.லெ.அப்துல்ஹலீம்

மலேசியாவின் மலேயப் பலகலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர்களில் ஒருவரான சல்மா அவர்கள் தமிழ்க்கணினி மொழியியல் ஆய்விற்கு இந்த பயிரங்கம் எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்றார். மேலும் மலேசிய மொழிகளில் சொல்திருத்தக் குழுமத்தில் நாங்கள் ஆறுபேரும் இடம்பெற்றுள்ளோம். எனவே இது எங்களுக்கு மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறோம் என்றார்.

நிகழ்ச்சியின் அடுத்ததாக நிறைவுரையை எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமத்தின் தலைவர் திரு ப. இரவி அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்த பதினொரு நாள் பயிலரங்கம் வந்திருந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

சிறப்புரை வழங்கிய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்கள் இந்தியாவின் மிக முக்கியமானப் பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகமும் ஒன்று. இப்பலகலைக்கழகத்தில்தான் தமிழ்ப்பேராயம் என்ற ஒரு துறைத்தொடங்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்கலைக்கழக வேந்தரின் தமிழ்ப்பற்றுதான் காரணம் என்றார்.

இறுதியாகப் பயிலரங்கில் கலந்துகொண்ட 100 பேராளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பதினொருநாள் சிறப்புரை நடத்திய பேராசிரியர்களின் செய்திகளை குறுந்தகடாக உருவாக்கிக் கொடுத்தனர்.இறுதியாக கணினித்தமிழ்க் கல்வித்துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு.இல.சுந்தரம் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியை மிக அழகாகத் தொகுத்துவழங்கியவர் கணினித்தமிழ்க் கல்வித்துறையின் துணைப்பேராசிரியர் திரு. ஆ.முத்தமிழ்ச் செலவன் ஆவார்.


பயிலரங்கில் கலந்துகொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் உ.அலிபாபா அவர்கள்.பயிலரங்கில் கலந்துகொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன், மற்றும் கோயம்புத்தூர் வெங்கடேஸ்வரா கல்லூரியின் கணினிதத்துறைப்பேராசிரியர் எ.சோமசுந்தரம் அவர்கள்.
2 comments:

 • guna thamizh says:
  February 8, 2012 at 5:25 AM

  மிக்க மகிழ்ச்சி முனைவரே..
  பயிலரங்கத்துக்கு வரஇயலவில்லையே என்ற வருத்தத்தைத் தீ்ர்ப்பதாகத் தங்கள் இடுகை அமைந்தது.

  நன்றி.

 • மணிவானதி says:
  February 8, 2012 at 6:28 AM

  நீங்கள் வரவில்லை என்பது எமக்கும் வருத்தம்தான்.
  அடுத்த பயிற்சியில் கலந்துகொள்ள முயற்சிப்போம்.

  நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்