/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, January 29, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (29-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஒன்பதாம் நாளில் காலை அமர்வில் இந்திய அறிவியல் கழக மின்னியல் துறைப்பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவர்கள் உரை ஒலிச் செயலி (TXET- TO- SPECH SYNTHESIS) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவ்ர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ
நினைவுப்பரிசு வழங்குதல்

தமிழ்மொழியில் இன்னும் கணினித்தொடர்பான ஆய்வு செம்மையாக தொடங்கவில்லை என்றும் அதற்கு நாம் புதுதடம் போடவேண்டும் என்றார்.
தமிழ்மொழியில் நாம் தங்குதடையின்றி நிரலாக்கம் செய்யவேண்டும். அதை நாம் வெகுவிரைவில் தொடங்க வேண்டும் என்றார்.
படிக்கின்ற செய்தியைக் கேட்க வேண்டும், நாம் பேசுவதை கணினி எழுதவேண்டும். பார்வை இழந்தவர்கள் புத்தைகத்தை வாசிப்பதை கேட்கவேண்டும். பேச இயலாதவர்களுக்கு அவர்களின் இயக்கமுறையில் பேசக் கற்றுக்கொடுக்கவேண்டும்.
இந்த வசதிகள் பிறமொழிகளுக்கு ஒரு சில உள்ளன.


பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ண

அம்ர்வில் துணைவேந்தர் பொன்னவைக்கொ, திருமதி உமா அவர்கள்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது பலர் பேசுவதை நாம் சேமித்து அதனைக் கேடகவேண்டும் அவ்வாறு கேட்கும்போது இல்லாத வார்த்தைகள், புதுமையான வார்த்தைகள், வட்டாரவழக்குச் சொற்களை நாம் இணைக்க முடியும். இதற்குப் பல இணையதளங்களில் அதற்கான சேவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலுள்ள மாவட்டப் பெயர்கள், மக்களின் பெயர்களின் என தொகுத்து வெளியிட்டால் நாம் புதிய உரை செயலியை உருவாக்கலாம் என்றார்.


அடுத்த அமர்வில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் இயல்மொழி ஆய்வு(NATURAL LANGUAGE PROCESSING) என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். நாம் கணினியில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் அடையமுடியும் என்று பேசினார். நம் தமிழ்மொழியில் பொறியைக் கொண்டு இயல்மொழிச் செயலாக்கம் செய்யவேண்டும் என்றார்.
கணிப்பொறியைப் பேசவைக்கும் முயற்சி 1960- ல் மூகாம்பிகை கல்லூரி மாணவர்கள் முயற்சி எடுத்து செய்தார்கள். அதற்குத் தமிழ்மொழியில் நிரலாக்கம் செய்ய வேண்டும். இனி யாரக இருந்தாலும் தமிழில் நிரலாக்கம் செய்வோம். உயிர் எழுத்து. மெய்யெழுத்து, உயிர்மை எழுத்து என்ற வகையில் பிரித்து மென்பொருளைத் தமிழில் உருவாக்கமுடியும் அதறகு இயல்மொழி ஆய்வுத் தேவை என்றார்.


பேராசிரியை திருமதி உமா அவர்கள் நாம் கணினியில் திருக்குறளை உள்ளீடுசெய்தால் கணினியே உரைசொல்லவேண்டும். மேலும் மருத்தவரின் ஆளுமைத்திறன், மருந்தக செயல்பாடுகள், அளவில் பெரிதாக இருக்கும் கட்டுரையைச் சுருக்கித்தருவது, போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்படவேண்டும் அதற்கு இந்த இயல்மொழி ஆய்வு முக்கியமாக இருக்கும் என்றார்.
அமர்வில் கலந்துகொண்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகப்பேராசிரியை



மதிய அமர்வில் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையின் தலைவர். திரு. இராமதாஸ் அவர்கள் திறவூற்று மென்பொருள் (open source software) உரை நிகழ்த்தினார். நாம் எந்த ஒரு மென்பொருள் வாங்கினாலும் நம் தேவைக்கேற்ப மாற்றம் செய்துகொள்ளும்படியான முறையில் இருக்கவேண்டும். மேலும் அதிலிருந்து வேறொரு மென்பொருளை உருவாக்கச் சிந்திக்க வேண்டும். மென்பொருள்கள் அனைத்தும் தகவலைப் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது என்றார்.


திரு. இராமதாஸ்

முனைவர் பொன்னவைக்கொ அவர்கலூடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம், கோயம்புத்தூர் வெங்கடேஸ்வரா கல்லூரியின் கணினிதத்துறைப்பேராசிரியர் எ.சோமசுந்தரம்.

ஏ.வி.சி கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்.
அமர்வில் கலந்துகொண்டவர்கள்.


அமர்வில் கலந்துகொண்டவர்களின் குழுப்படம்


திட்ட ஒருங்கிணைப்பாளர் இல. சுந்தரம், தமிழ் இணையக்கல்விக் குழுமத்தின் பேராசிரியர் திரு,ஜானகிராமன், குற்றாலம் ஆதிபராசக்தி தமிழ்த்துறை ப்பேராசிரியை.












0 comments: